SELANGOR

ஏன் ஜமால் மட்டும் பள்ளியில் நுழைய அனுமதி?

ஷா ஆலம், நவம்பர் 25:

பண்டான் இண்டா தேசியப் பள்ளியில் பண்டான் தொகுதி அம்னோ இளைஞர் பகுதி நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட நடவடிக்கையை டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமாட் கேள்வி எழுப்பினார். செம்பாக்கா சட்ட மன்ற உறுப்பினருமான இஸ்கண்டர், கல்வி அமைச்சு நீதியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றார். எந்த அமைச்சும் அல்லது அரசாங்க இலாகாகளும் மாற்றான் தாய் போல் செயல் படக் கூடாது என்று விவரித்தார்.

”  இதற்கு முன்பு ஒரு ஆசிரியர் பள்ளிக்கு மாநிலத்தின் முக்கிய தலைவரை அழைத்து வந்ததன் அடிப்படையில் காரணம் கோரும் கடிதம் வழங்கப் பட்டதாக நாங்கள் புகாரை பெற்றோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

இன்று காலையில் சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் முகமட் யூனூஸ் இளைஞர் பகுதியின் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் அரசன்


Pengarang :