SELANGOR

ஜெஎம்பி அக்கறையிண்மையாக வேலை செய்ய வேண்டாம்

ஷா ஆலம், 19 ஏப்ரல்:

புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ தீபா அடுக்கு மாடி  கூட்டமைப்பு நிர்வாக குழு  (ஜெஎம்பி) பொறுப்புள்ள நிர்வாகமாக  இருத்தல் வேண்டும் என்றும் அதன் வீடமைப்புக்குற்பட்ட துப்புரவு பணிகள் செம்மையாக செய்து கொள்ள வேண்டும்.

பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறுகையில் மக்களும் நன்னெறி பண்புகளை பெற்றிருத்தல் அவசியம், ஏனெனில்  இது வீடமைப்பு பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் சுத்தமாக இருக்கவும் அடிப்படை வசதிகளை தவறாக பயன்படுத்துவது தவிர்க்கலாம்.

” புதிய நிர்வாகம் பொறுப்பாகவும், திறன் மிக்கவும் மற்றும் வீறு கொண்டு செயல்பட்டு  இந்த  அடுக்குமாடி வீட்டு பிரச்சனையை களைய வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனைவேண்டுகிறேன். தொடர்ந்து இங்குள்ள  அனைத்து மக்களும்  ஒன்றிணைந்து செயல் பட்டு  இந்த பகுதி பாதுகாப்பாகவும், செழுமையாகவும் மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாக பாடுபட வேண்டும்.”

ரோஸ்ஸியா மேலும் கூறுகையில், நீர் தேக்கி உடைப்பு, அடுக்குமாடி பழுதூக்கி சேவை தடைபடுவதும் இங்கு மக்கள்  எதிர் நோக்கும் அன்றாட பிரச்சனைகளாகும்  என்றார்.

rodziah 2

 

 

 

 

 

 

ஆனாலும், சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியம் மூலம்  இந்த பிரச்சனைகளைக் களைய ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

 

“மேலும், கண்ட இடங்களில் குப்பைகள், சமூக மண்டபத்தில் குப்பைக் குவியல், ஓட்டைகள் மற்றும்  இருட்டான பகுதிகள் போன்ற சுகாதார பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண வேண்டும். ” என்று உறுதியாக கூறினார்.

-AA-


Pengarang :