SELANGOR

சிலாங்கூர், ஹிஜ்ரா தொழில் முனைவர்களுக்கு ரிம 237 மில்லியன் கடனுதவி அளித்துள்ளது

ஷா ஆலம், ஜூலை 25:

சிலாங்கூர் மாநில அரசாங்கம், சிலாங்கூர் ஹிஜ்ரா கடனுதவி திட்டம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை ரிம 237 மில்லியன் தொழில் முனைவர்களுக்கு வழங்கியுள்ளது என்று மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். இது வரை மொத்தம் 38,821 ஹிஜ்ரா தொழில் முனைவர்களை உருவாக்கி இருக்கிறது என்றார்.

”   மொத்தம் 38,821 கடனுதவி விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டது என்றும் ரிம 237,751,500 கடனுதவி தொகையாக கொடுக்கப் பட்டுள்ளது. 82.14% ஹிஜ்ரா தொழில் முனைவர்கள்   திரும்பி செலுத்தும் நிலையில் உள்ளனர்,” என்று சிலாங்கூரின் 13வது சட்ட மன்ற கூட்டத் தொடரில், சுங்கை பீலேக் சட்ட மன்ற உறுப்பினர் லாய் நூக் லான் கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறினார்.

 

amir-dun

 

 

 

 

 

கடந்த 2008-க்கு பிறகு ஆரம்பித்த ஸ்கிம்செல், மிம்பார் மற்றும் வாலா ஆகிய கடனுதவி திட்டங்களை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஹிஜ்ரா கடனுதவி திட்டமாக மாற்றி அமைத்து மலேசியாவிலே முன்னணி மாநிலமாக சிலாங்கூர் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :