SELANGOR

தமிழ் பள்ளிகளின் உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பிற்காக எம்பிஐ RM45,000 ஒதுக்கீடு

உலு சிலாங்கூர், ஏப் 26: மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்பது தமிழ் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக எம்பிஐ RM45,000 சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் 5,000 ரிங்கிட் ஒதுக்குவது உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“தேர்தல் என்பதால் கண்டிப்பாக சிலர் இத்திட்டத்தை பற்றி தவறான கருத்தை பரப்புவார்கள். ஆனால், இத்திட்டத்தை நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்துகிறோம். கடந்த ஆண்டு சிலாங்கூர் முழுவதிலுமுள்ள 3594 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளி பத்து லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து இருநூறை (RM 1,078200) இதே பள்ளி பேருந்து கட்டணமாக பெற்றனர். கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பிரத்தியோகமாக செயல்படுத்தும் திட்டமாகும்.

எல்லா மாணவர்களும் கல்வி கற்க வேண்டும், பொருளாதார நெருக்கடியால் எவரும் கல்வியை இடையில் கை விடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்படுகிறது. அதே வேளையில் ஒதுக்குப் புறங்களில் உள்ள பள்ளிகள் மாணவர் பற்றாக்குறையால் பாதிக்கும் சூழலையும் தவிர்க்கும் என்றார். நாங்கள் எப்போழுதும் கல்விக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதற்கான சான்றாகும்.

“2008 முதல் இப்போது வரை, குறிப்பாக சிலாங்கூரில் வாழும் அனைத்து குடிமக்களும் சம வாய்ப்புகளைப் பெறுவதிலும், ஒன்றாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நேற்று, பத்தாங் காலி பொது மண்டபத்தில் நடைபெற்ற பள்ளிப் பேருந்துக் கட்டண மானியத் திட்டம் மற்றும் சிலாங்கூர் வறுமை ஒழிப்பு திட்ட நிகழ்விற்குப் பிறகு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இவ்வாறு கூறினார்.

இத்திட்டத்தில் லாடாங் பத்தாங் காலி, சங்காட் அசா, எஸ்கோட், லாடாங் கோலா குபு பாரு, லாடாங் கெர்லிங், லாடாங் களும்பாங், லாடாங் லிமா பிலாஸ், லாடாங் சுங்கை சோ மற்றும் லாடாங் புக்கிட் பெருந்தோங் ஆகிய பள்ளிகள் இடம்பெற்றன. .

இதற்கிடையில், குறிப்பாக மழைக் காலங்களில் சேதமடைந்து, பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வடிகால் மற்றும் பள்ளி பாதைகளை சரிசெய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும் என லாடாங் களும்பாங் பள்ளியின் மூத்த உதவி ஆசிரியர் எஸ் வேலன் கூறினார்.

“இந்தப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்களின் பாதுகாப்புக்கு அவசரமாகத் தேவைப்படும் வசதிகளைச் சரிசெய்ய இந்த தொகை எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,” என்றார்.

இவ்விழாவில் உலு சிலாங்கூரைச் சுற்றியுள்ள 324 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பேருந்து கட்டண மானிய வவுச்சரையும் அமிருடின் வழங்கினார். இத்திட்டத்திற்கு மொத்தம் RM97,200 ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மேலும், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் 26 வணிகர்களுக்கு வணிக உதவி பொருள் அல்லது உபகரணங்கள் வழங்கும் சிலாங்கூர் வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவித் திட்டத்தையும் அமிருடின் தொடங்கி வைத்தார்.


Pengarang :