NATIONAL

நூருல் இஸா: அரசாங்கம் சட்டத்தை பயன்படுத்தி மக்களாட்சியை நசுக்கியது, தீவிரவாதத்தை ஒடுக்க அல்ல

ஷா ஆலம், ஜூலை 10:

தேசிய முன்னணி அரசாங்கம் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (ஐஎஸ்ஏ) மற்றும் பாதுகாப்பு குற்றச் சட்டம் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 (சோஸ்மா) போன்றவைகளைப் பயன்படுத்தி அரசியல் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவே மாறாக தீவிரவாதத்தை எதிர்த்து அல்ல என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் நூருல் இஸா அன்வர் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 979 பேர் சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதில் 177 பேர் மட்டுமே ஐஎஸ் தீவிரவாதிகள் என்று தடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

izzah

 

 

 

 

 

”   ஐஎஸ் தீவிரவாதிகள் என்று தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 43 பேர் அந்நியர்களாக இருக்கக்கூடும் என்று தாம் நம்புவதாகவும், இதற்குமுன்பு துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹாமிடியும் இதே கருத்தை பகிர்ந்து கொண்டார். ஆக தடுத்து வைக்கப்பட்ட 800 பேரில் பெரும்பாலும்  ஐஎஸ் தீவிரவாதத்தில் தொடர்பு கொண்டவர்கள் இல்லை. சீர்திருத்தவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகள் லஞ்ச ஊழல் எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் ஆவர். மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் குரல்களை ஒடுக்கவே இந்த சட்டங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது. தீவிரவாதிகளை ஒடுக்க அல்ல என்ற உண்மையை நாம் கண்கூடாக பார்க்கிறோம்,” என்று தெரிவித்தார்.

தற்காப்பு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நாட்டை ஆண்டால் ஐஎஸ் மற்றும் தீவிரவாதிகளை தடுக்கக்கூடிய ஆற்றல் இருக்காது என்ற கோல் கணக்கில் கூற்றுக்கு பதில் அளிக்கையில் நூருல் இஸா அன்வர் பேசினார்.

#கேஜிஎஸ்


Pengarang :