SELANGOR

2017 சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு விருதுகள்

ஷா ஆலம், ஜூலை 6:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தமிழ்ப்பள்ளி யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா எதிர் வரும் ஜூலை 23, ஜூப்ளி பேராக் மண்டபத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையில் நடைபெற உள்ளதாக தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்க ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தெரிவித்தார்.

இந்த விருது விழாவில் கடந்த 2016-இல் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதி சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏறக்குறைய 1500 பேர் வருகை அளிப்பார்கள் என்று கணபதி ராவ் கூறினார்.

2014-இல் தொடங்கி, இவ்வாண்டு நான்காக முறையாக நடைபெறும் இந்த விழா, சிறப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கும் விருது வழங்கப்படும் என்று விவரித்தார். இதே போன்று, ஐந்து முன்னாள் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘தோகோ குரு’ பட்டமும் வழங்கப் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசுகையில், இவ்விருதுகள் யாவும் முன்னாள் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத்தின் மூலம் பரிந்துரை செய்யப் படும் என்று விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பல அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அதன் நோக்கத்தை அடைய உறுதி செய்வார்கள் என்று கணபதி ராவ் சிலாங்கூர் இன்றுக்கு   கூறினார்.


Pengarang :