RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: என்னையும் தணிக்கை செய்துள்ளனர்

ஷா ஆலம், ஜூலை 6:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தணிக்கை செய்யும் நடைமுறையை ஒரு பிரச்சனை ஆக்க வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு முன்பு, தன்னுடைய புக்கிட் அந்தாராபங்சா சட்ட மன்றம் மற்றும் கோம்பாக் நாடாளுமன்றம் ஆகிய இரு தொகுதிகளும் தணிக்கை செய்யப்பட்டது எனவும் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”  நான் ஏற்கனவே மாநில அரசாங்கம் தணிக்கை செய்யும் நடவடிக்கையில் குறுக்கீடு செய்யாது என்று விளக்கி விட்டேன். நேர்மையான மற்றும் வெளிப்படையான கொள்கையை மாநில அரசாங்கம் பின்பற்றி நடக்கும். அப்படி தணிக்கை குழு எந்த பிரதிநிதிகளையும் தணிக்கை செய்தால், மாநில நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகள் இருக்காது. தணிக்கை குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். நானும் முன்பு தணிக்கை செய்யும் போது முழு ஒத்துழைப்பு வழங்கினேன். அதை நான் அரசியல் ஆக்கவில்லை,” என்று ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் பிகேஎன்எஸ் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

நேற்று, கெலானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், தன்னுடைய அகப்பக்கத்தில் தனது தொகுதிக்கான ஒதுக்கீட்டை நிறுத்தி விட்டதாக குறைக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் பேசிய அஸ்மின் அலி, வோங் சென் நேரிடையாக மாநில அரசாங்கத்திடம் அணுகி இருக்க வேண்டும், அகப்பக்கத்தில் அல்ல என்று நினைவுறித்தனார்.

#கேஜிஎஸ்


Pengarang :