SELANGOR

சிலாங்கூர் மகளிர் மேம்பாடு கொள்கை – மகளிர் மேம்பாட்டை உயிர்ப்பிக்கும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16:
சிலாங்கூர் மாநில மகளிர் மேம்பாடு கொள்கையும் புதிய் திட்டமிடல் செயல்பாடும் (2017 – 2020) சிலாங்கூர் மாநில மகளிர் வாழ்வாதார மேம்பாட்டிலும் பெரும் பங்காற்றும்.சிலாங்கூர் வாழ் மகளிர் மேம்பாட்டின் துரிதாமான செயல்திட்டத்தில் மைல் கல்லாய் அமையவிருக்கு இத்திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதன் ஆதரவை வழ்னக்கியிருப்பதோடு ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் பெரும் வளர்ச்சியின் முதுகெலும்பு பெண்கள்தான் என்பதையும் ஒப்புக்கொண்டிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் டரோயா ஹல்வி குறிப்பிட்டார்.

மகளிர் மேம்பாடு மற்றும் அவர்களின் வாழ்வதார உரிமை அது சார்ந்த இயல்பிகள் அனைத்தும் ஒருசேராய் தொடர்ந்து சிறந்த இலக்குடன் பயணிக்க திறன்மிக்க மகளிர் செயல்பாடுகளின் மூலம் அதனை வரையறுக்க முனைவதாகவும் செமந்தா சட்டமன்ற உறுப்பினரும் மாநில சுகாதார,சமுகநலன்,மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் டரோயா நினைவுறுத்தினார்.

இதன் மூலம் மகளிர் விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்துவதோடு அவர்களின் தனித்துவமான மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்ற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்த டாக்டர் டரோயா பொருளாதாரம்,தரமான வாழ்க்கை நிலை,தலைமைத்துவம்,பொதுநலம்,பாதுகாப்பு மற்றும் மகளிர் கண்டுபிடிப்பு – படைப்பாற்றல் ஆகியவற்றிலும் தனித்துவமாய் கவனம் செலுத்திட இஃது வழிகோலும் என்றார்.

அதுமட்டுமின்றி,இதன் மூலம் அரசியலில் மகளிர் பங்களிப்பினை மேம்படுத்துவதோடு அவர்களின் ஈடுப்பாட்டையும் அதிகரிக்க செய்ய முடியும்.மேலும்,மகளிர் ஆரோக்கியம் மற்றும் சுகாராத்தோடு பெண்கள் இயக்கங்களும் ஆக்கப்பூர்வமாய் செயல்படுவதை உறுதி செய்ய முடியும் என்றும் டாக்டர் டரோயா நம்பிக்கை தெரிவித்தார்.அதேவேளையில்,இத்திட்டத்தின் முதன்மை நோக்கமே மகளிர் ஆற்றலை மேம்படுத்துவதுதான் என்றும் நிலையான மற்றும் சமமான உரிமை,நீதி, ஆகியவை உள்ளடக்கியதும் தான் என்றும் கூறினார்.

அதுமட்டுமின்றி,இத்திட்டத்தின் மூலம் மகளிர் மேம்பாடு தனித்துவ இலக்கை எட்டுவதோடு மட்டுமின்றி சமூக பொருளாதாரத்தில் அவர்களின் நிலை சிறந்த தலத்தை நோக்கி முன்னேறும்.அதேவேளையில்,அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு சுகாதாரம் போற்றப்படுவதோடு மகளிர் வாழ்வாதாரம் ஆக்கப்பூர்வமானதாய் உயர்வதை உறுதி செய்யவும் முடியும் என குறிப்பிட்டார்.

ஆண்களுக்கு ஈடான கல்வி நிலையினை பெண்கள் கொண்டிருந்தாலும் பொருளாதார நிலையிலும் சுயமாய் முடிவெடுக்கும் நிலையிலும் ஆண்களை காட்டிலும் பெண்கள் சற்று பின் தங்கிய நிலையில் இருப்பதாகவே சுட்டிக்காண்பித்த அவர் பெண்களும் ஆண்களுக்கு ஈடாய் மிளிய இத்திட்டம் வழி செய்யும் என்றார்.சிலாங்கூர் மாநில மகளிர் மேம்பாட்டிற்காக வரையறுக்கப்பட்ட இத்திட்டம் அதன் உண்மை வடிவத்தை பெற்று அதன் இலக்கி வெற்றி பெற சுமார் வெ.9 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் கல்வி,ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தில் மகளிர் மேம்பாடும் வளர்ச்சியும் துரிதமான நிலையும் எட்டும் என்றார்.

#ரௌத்திரன்


Pengarang :