NATIONAL

கேமரன் மலையிலிருந்து ஏற்றுமதியான பழங்கள் சீனாவில் நிராகரிப்பு

கேமரன் மலை, அக்.26:

கேமரன் மலையிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பழங்களில் உயிரியல் இராசாயன கூறு அல்லது எல்.எம்.ஓ அல்லது நவீன உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மரபணுக் கலவை கொண்டிருந்த உயிரின வளர்ச்சி தென்பட்டதால் அப்பழங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

சீனாவின் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு இது குறித்து எச்சரிக்கை அளித்ததை தொடர்ந்து அந்தப் பழங்களில் இந்த மரபணு கலவை உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஶ்ரீ வான் ஜூனாய்டி துவாங்கு ஜாப்பார் கூறினார்.

“சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பழங்களின் மீது சோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றில் இந்தக் கலவை தென்பட்டதைத் தொடர்ந்து அவை நிராகரிக்கப்பட்டுள்ளன” என்று நாடாளுமன்றத்தில் டத்தோ டாக்டர் நோராய்னி கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :