SELANGOR

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபாவளியை கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் சீக்கியர்களும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்தினை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.இந்த தீபாவளி திருநாளில் குடும்பம் சகிதம் ஒன்றிணைந்து சொந்தங்களோடும் நட்புகளோடும் குதுகலமாய் இனிமையான நினைவுகளை மீட்டெடுப்பதும்,உறவுகள் மத்தியில் அன்பையும் ஆழமான உறவையும் வலுப்படுத்தவும் தீபத்திருநாள் முதன்மைக் கொள்கிறது.

தீபாவளி என்பது தீமையை அழித்து நன்மையை மெய்பிக்கும் உன்னத திருநாள்.இத்திருநாளில் நாம் அனைவரும் சகோதரத்துவத்தை பேணி நம்மிடையே இருக்கும் இருளினை அகற்றி அன்பும்,புரிந்துணர்வும் மற்றும் ஒற்றுமையையும் மேலோங்க செய்வோம்.மலேசியா போன்ற பல்லினம் வாழும் நாட்டில் நாம் மதநல்லிணக்கத்தோடும் ஒருவருக்கு ஒருவர் மதித்தும் அன்பை பகிர்ந்தும் உன்னத உறவுகளோடு மெய்பிக்க தீபத்திருநாள் உயிர்ப்பிக்கும்.
இருள் நீங்கி ஒளியூட்டும் இத்திருநாளில் நாட்டின் எதிர்காலமும் இருள் நீங்கி ஒளியால் மிளிரட்டும்.நம்பிக்கையான எதிர்கால மாற்றத்திற்கு தீபத்திருநாளில் ஒளி பிரகாசிக்கட்டும்.தீபத்திருநாளில் மெய்பிக்கும் வெளிச்சமானது நாளைய தலைமுறைக்கு நம்பிக்கையான மலேசியாவை உருவாக்க வழிகோலும்.

அதேவேளையில்,சிலாங்கூர் அரசாங்கம் இம்மாநிலத்தில் யாரையும் புறக்கணிக்காமல் மக்களுக்கான நலத்திட்டங்களை ஆக்கபூர்வமாகவும் விவேகமாகவும் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் பல்லின மக்களுக்கான உன்னத அரசாங்கம்.இங்கு இம்மாநில வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் எந்தவொரு இனமும் விடுப்படவில்லை.மாநில அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஒவ்வொரு பரிவு மிக்க திட்டங்களும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் உகர்ந்த நிலையையும் அஃது கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனம்,மதம்,கடந்து சிலாங்கூர் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பரிவு மிக்க மக்கள் நலத்திட்டங்கள் சிலாங்கூர் வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைப்பதோடு மட்டுமின்றி சிலாங்கூர் மாநிலத்தின் தனித்துவ சிறப்பாகவும் அஃது விளங்குகிறது.
சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நாம் அனைவரும் இனம்,மதம்,நிறங்களை ஒதுக்கி விட்டு ஒரே சிந்தனையோடு கைகோர்க்க வேண்டும்.அப்போதுதான் நாம் சிலாங்கூர் வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல முடிவதோடு நாளைய தலைமுறைக்கு நம்பிக்கையான புதியதொரு மலேசியாவை அடையாளப்படுத்த முடியும்.

தீபத்திருநாளில் நாம் இச்சிந்தனையினை மெய்பித்தால் நமது தீபாவளி கொண்ட்டாட்டம் மட்டுமில்லை நமது வாழ்க்கையும் நமது தலைமுறைகளின் வாழ்வியலும் நம்பிக்கையான சந்தோசமான இலக்கை நோக்கி நகரும் என்பதில் துளியும் ஐயமில்லை.இந்த இனிய தருணத்தில் சிலாங்கூர் வாழ் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களோடு மலேசியா வாழ் மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்தினை தெரிவிப்பதில் பெரும் இன்பம் கொள்கிறேன்.
அனைவரும் தீபத்திருநாள் வாழ்த்துகள்!!
டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்.


Pengarang :