SELANGOR

சீறுநீரக சிகிச்சைக்கு 5 மில்லியன், மார்பக பரிசோதனைக்கு 2 மில்லியன்

ஷா ஆலாம், நவம்பர் 10:

சிலாங்கூர் மாநில மக்கள் ஆரோக்கியமான சூழலிலும் சுகாதாரமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆரோக்கியமான சிலாங்கூர் எனும் திட்டத்தின் கீழ் சிறுநீரக சிக்கலை எதிர்நோக்கியிருப்பவர்கள் தங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி அவர்களுக்கு மருத்துவ ரீதியில் உதவிட மாநில அரசாங்கம் அதன் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 5 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

இதற்கு முன்னர் 3 மில்லியனாக இருந்த ஒதுக்கீடு 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூடுதலாக 2 மில்லியனை ஒதுக்கி அவற்றை 5 மில்லியனாக நிலைநிறுத்தி இருப்பதாகவும் மந்திரி பெசார் கூறினார்.அதேவேளையில்,மார்ப்பக புற்றுநோய் விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதுகுறித்த பரிசோதனையை மேற்கொள்வதற்கும் மாநிலம் முழுவது இலவச மார்பக பரிசோதனைக்கும் மாநில அரசாங்கம் வித்திட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலவச மெமோகிரம் என சொல்லப்படும் மார்பக பரிசோதனைக்கு இதற்கு முன்னர் 1 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அவை 2 மில்லியனாக அதிகரித்திருப்பதாகவும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி குறிப்பிட்டார்.இதன் மூலம் இலவச பரிசோதனையை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்விற்கு பெண்கள் உத்தரவாதம் செய்துக் கொள்ளலாம் என்றார்.
சிலாங்கூர் வாழ் மகளிர் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த இலவச பரிசோதனையில் தங்களை உட்படுத்திக் கொண்டு நோயற்ற நிலையினை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.அதற்கான பதிவினை அவர்கள் மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற அலுவலகங்களிலும் மேற்கொள்ளலாம்.இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 22,5050 பெண்கள் நன்மையை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :