SELANGOR

தோட்டத் தொழிலாளர்களுக்கு 5 லட்சம் நிலைநிறுத்தம்

ஷா ஆலம், நவம்பர் 13:

சிலாங்கூர் மாநில வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் குறிப்பாக நிர்வாகத்திறனிலும் செயல்பாடுகளிலும் தனித்துவ சேவையினை வழங்கி வரும் சிலாங்கூர் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு இம்முறை 3 மாத போனஸ்யை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தார்.

வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் வரும் 2018ஆம் ஆண்டு பெரும் சவால் மிக்கதாய் அமைந்திருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை என்று உணர்த்திய மந்திரி பெசார் 2017ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு வழங்கிய 2 மாத போனஸ்யை 2018ஆம் ஆண்டில் 3 மாத போனஸ்சாக உயர்த்தினார்.

மாநில மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்திடும் அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அவர்களை பாராட்டும் வகையிலும் இந்த போனஸ் வழங்கப்படுவதாகவும் கூறிய மந்திரி பெசார் இதன் மூலம் மாநில அரசாங்கத்தின் வேலை செய்யும் சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் இந்த போனஸ்யை பெறுவார்கள் என்றார்.

அதேவேளையில்,இந்த போனஸ் தொகையினை இம்மாநிலத்தை சார்ந்த 6725 சமய ஆசிரியர்களும்,78 சீன புதுகிராமத் தலைவர்களோடு 48 இந்திய சமுதாயத் தலைவர்களும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சிலாங்கூரில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலன் எல்லா சூழலிலும் தொடர்ந்து காக்கப்படும் எனும் நம்பிக்கையை உயிர்ப்பிக்கும் வகையில் கடந்தக்காலங்களை போலவே வரும் 2018ஆம் ஆண்டிலும் தோட்டத் தொழிலாளர் நலனுக்காக வெ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக தோட்டத் தொழிலாளர்கள் தையல் கலை,சமையல் கலை, அலுவலகங்களை சீர்ப்படுத்தும் பணி,வாகனம் பழுதுப்பார்த்தல் உட்பட தொழில் திறன் பயிற்சி ஆகியவை பெறுவதற்கு இந்த ஒதுக்கீடு பெரும் பங்காற்றும் என்றும் அஸ்மின் அலி கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :