NATIONAL

ரிம 20 பில்லியனை இவ்வளவு ஆண்டுகள் எப்படி ஒளித்து வைத்திருக்க முடியும்?

கோலா லம்பூர், நவம்பர் 30:

1990-களில் ஏற்பட்டதாக கூறப்படும் பேங்க் நெகாராவின் கீழ் அந்நிய நாணய பரிமாற்றத்தின் மூலம் ஏற்பட்ட நட்டம் ரிம 31.5 பில்லியன் என்று அறிவித்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையைக் கண்டு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கூறுகையில், நாடாளுமன்றத்தில் முன்பு ரிம 10.7 பில்லியன் நட்டம் அடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்றார்.

”   ஏறக்குறைய ரிம 21 பில்லியனை எந்த வங்கி கணக்கில் மறைத்து வைத்திருக்க முடியும்? இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் ரிம 21 பில்லியனை எப்படி மறைத்து வைத்திருக்க முடியும்? இதே போல் 1எம்டிபி மற்றும் பெல்டா மோசடிகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு அரச விசாரணை ஆணையம் உண்மை நிலவரத்தை தெரிவிக்குமா?” என்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

 

 

 

 

 

 

 

குவான் எங் மேலும் கூறுகையில், நாட்டின் நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட மோசடி என கருதப்படும் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலீனா ஓத்மானுக்கு கடிதம் வழங்கப் பட்டதாக கூறினார். இதைத் தொடர்ந்து பதில் அளித்த அஸாலீனா தாம் பிறகு முடிவு எடுப்பார் என்று விவரித்தார்.

அதே செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடைசி நாளில் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கிய நடவடிக்கையை கேள்வி எழுப்பினார். இந்த அறிக்கை அக்டோபர் 13 பூர்த்தியாகி விட்டது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த அக்டோபர் 23 ஆரம்பம் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

#வீரத் தமிழன்

 


Pengarang :