NATIONAL

சந்தாரா: மறுசுழற்சி மருந்துகள் நோயாளிக்கு பயனளிக்குமா?

சிகாமட், டிசம்பர் 6:

மறுசுழற்சி மருந்து விழிப்புணர்வு செயல்பாடுகளின் மூலம் சுகாதார அமைச்சு மருந்துகள் பாழாவதிலிருந்து தடுக்க முயல்கிறதா அல்லது போதுமான மருந்துகளை வாங்கிட முடியாமல் நிலவும் பொருளாதர நிலையை ஈடுக்கட்ட முனைகிறதா என சிகாமாட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளரும் கெஅடிலான் கட்சியின் வியூகப்பிரிவு தலைவருமான டத்தோஸ்ரீ எட்மன் சந்தாரா கேள்வி எழுப்பினார்.இது தொடர்பில் அவர் முன் வைத்த கேள்விகள் கீழ்கண்டவாறு அமைந்திருந்தது:-

1. பெரும்பான்மை அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லை.நோயாளிகள் வெளியில் மருந்தை வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியமே ஒப்புக் கொண்ட நிலையில் வறுமையான குடும்ப பின்னணியை கொண்ட நோயாளி மருந்தை வாங்கும் ஆற்றல் இல்லாத நிலையில் அவரது சூழல் எவ்வாறு இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

2. மருந்துகள் மீதிலான தரம் நிலையில் தொடர்ந்து அரசாங்கம் பெறும் அழுத்தத்தை கொடுத்து வருவதால் மருந்துகளின் விலை ஒவ்வொரு ஆண்டும் உயர்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்தக்காலங்களில் அரசு கிளினிக் மற்றும் மருத்துவமனைகளில் கொடுக்கப்பட்ட மருந்துகள் 70 முதல் 80 விழுகாடு சிறந்த நிலைப்பாட்டினை கொண்டிருந்ததாகவும்,தற்போது வழங்கப்படும் மருந்துகள் குறந்த நிலையிலான செயல்பாட்டினை கொண்டிருப்பதாகவும் அரசு மருத்துவமனை மருத்துவரின் கூற்றையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

3. இது தொடருமானால் நோயாளிக்கு மட்டும் இல்லாமல் நாட்டின் உற்பத்தி குறைவதோடு செலவினமும் தொடர்ந்து அதிகதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,தற்போதைய சூழலில் நாட்டில் 30 விழுகாடு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

4. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தேசிய முன்னணி அரசாங்கம் சுகாதாரத்திற்கான மானிய ஒதுக்கீட்டை குறைத்ததுதான் காரணமா?ஆரோக்கியமும் சுகாதாரமும் மனித உரிமைகள்.ஒரு அரசாங்கத்தின் கடமையும் கூட என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.
இதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.சிலாங்கூரின் பரிவு மிக்க திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ அட்டை அதற்கு வழிகோலுகிறது என்கிறார் டத்தோஸ்ரீ எட்மன் சந்தாரா.
நாட்டில் வசூல் செய்யப்படும் வரி தொகையில் பெரும் பகுதியை அரசாங்கம் மக்களின் சுகாதார விவகாரங்களும் முதன்மை அளிக்க வேண்டும்.அதை விடுத்து பெரும் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதால் எவ்வித பயனுமில்லை.

5. மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மீது முறையான ஆய்வுகளும் பரிசோதனைகளும் செய்யப்படவில்லை.அஃது பாதுகாப்பானதா?நோயாளிக்கு ஏதுவானதா என்பது குறித்தும் அதில் நச்சு தன்மையுண்டா என்பதும் அறியப்பட வேண்டும்.
இம்மாதிரி மறுசுழற்சிக்காக ஒப்படைக்கப்படும் மருந்துகள் முறையான இடங்களில் வைக்கப்படாமல்,அஃது பயன்பாட்டிற்கு ஏதுவான நிலையில் இல்லாமல் கெட்டும் போய்விடுகிறது.
இந்நிலையில்,நோயாளிகளால் மீண்டும் ஒப்படைக்கப்படும் மருந்துகள் பாதுகாப்பானது,பயன்பாட்டிற்கு உகர்ந்தது எனும் வகையில் அரசாங்கத்தின் உத்தரவாதன் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

#வீரத் தமிழன்


Pengarang :