NATIONAL

ஸ்பாட், ஜாசா & தேசிய பேராசிரியர் மன்றம் ஆகியவை கலைக்கப்பட்டது

புத்ரா ஜெயா, மே 23:

தரைப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட் ) கலைக்கப்பட்ட நிலையில் , இதன் செயல்பாடுகள் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். இந்த ஆணையம் பயனீட்டாளர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்றும் மாறாக அரசாங்கத்தின் செலவை அதிகரிக்க உதவியுள்ளது என்று மகாதீர் கூறினார். ஸ்பாட்டின் தோன்றல் நாட்டிற்கு வீண் விரயம் மட்டுமே என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு பேசினார்.

ஸ்பாட் மட்டுமில்லாமல், தேசிய பேராசிரியர் மன்றத்தையும் மகாதீர் கலைத்தார். இது தோற்றுவித்த போது அரசாங்கத்திற்கு பயனான விவரங்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், வெறும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கும் இயந்திரமாகவே இருந்து வந்தது என்று விவரித்தார்.

இது தவிர, சிறப்பு விவகாரப் பிரிவு (ஜாசா),  அம்னோ தேசிய முன்னணியின் பிரச்சார சாதனமாக செயல்படுத்தப் பட்டது. அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தை தற்காக்கவே இருந்து வந்த நிலையில், ஜாசாவும் கலைக்கப்பட்டது.


Pengarang :