NATIONAL

வீடமைப்பு பகுதிகளில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்

கோலாலம்பூர், செப்டம்பர் 23 :

ஒவ்வொரு பி.பி.ஆர்  வீடமைப்புப் பகுதிகளிலும் குழந்தைகள்  பராமரிப்பு மையங்களை அமைக்க வீடமைப்பு மற்றும் ஊராட்சிதுறை அமைச்சு ஆவணம் கொண்டிருப்பதாக அதன் அமைச்சர் சூராய்டா கமாரூடின் தெரிவித்தார்.

குழந்தைகளை தத்தம் பகுதிகளிலுள்ள தாய்மார்களே பராமரிக்கும் வகையில் இத்திட்டம் அதன் வரையறையை கொண்டிருக்கும் என்றும் இதன் மூலம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதோடு வட்டார பொது மக்கள் மத்தியிலும் அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிட வழ் செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதற்கு முன்னர் கட்டப்பட்ட பி.பி.ஆர் வீடமைப்பு பகுதிகள் மற்றும் இனி கட்டவிருக்கும் வீடமைப்பு திட்டங்களிலும் குழந்தைகள் பராமாரிப்பு மையம் இடம் பெறும் வகையில் அதனை செம்மைப்படுத்தியிருப்பதோடு இம்மாதம் இறுதியில் அது தொடர்பிலான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்றைய சூழலில் இன்னமும் தங்களின் பிள்ளைகளை குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கோ அல்லது வேலைக்கு ஆள் வைத்து குழந்தைகளை பராமரிக்கும் நிலையிலும் நம்மவர்கள் இல்லை.அதற்கு அவர்களின் பொருளாதார சூழல் வழிசெய்யவில்லை எனவும் கூறிய அவர் அதனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளை தத்தம் அண்டை அயலாளர்கள் குழந்தைகளை தன்னார்வ அடிப்படையில் கவனித்தும்  கொள்வார்கள் என்றார்.


Pengarang :