SELANGOR

ஒரு வரவு செலவுத் திட்டம், 60 ஆண்டுகளில் ஏற்பட்டப் பிரச்சனைகளை களைய முடியாது !!!

ஷா ஆலம், நவம்பர் 8:

தேசிய முன்னணியின் கீழ்  நாட்டு நிர்வாகம், கடன் பிரச்சினை மற்றும் பொருளாதார சீர்குலைவு ஆகியவை ஒரு வரவு செலவுத் திட்டத்தில் தீர்த்து வைக்க முடியாது என்று மந்திரி பெசார் அலுவலகத்தின் பொருளாதார ஆலோசகர் டத்தோ டாக்டர் ஸூல்கிப்லி ஸாக்காரியா கூறினார். கடந்த 60 ஆண்டு காலத்தில் அரசு நிர்வாகத்தில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்ட பாதிப்பு இதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

”  கடந்த 60 ஆண்டுகளாக நடந்த நிர்வாக கோளாறுகளை நிவர்த்தி செய்ய ஒரு வரவு செலவுத் திட்டம் போதாது, மாறாக நீண்டகால அடிப்படையில் திட்டம் வரையப்பட்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” என்று டாரூல் எசான் கல்லூரி ஏற்பாடு செய்த 2019 வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

2019-இன் வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 வர்க்கத்தினரை முன்னிலை படுத்தி பல்வேறு திட்டங்களை வரைந்துள்ளதை மேற்கோள்காட்டி டாக்டர் ஸூல்கிப்லி கூறினார்.


Pengarang :