SELANGOR

வீட்டுக்கொரு தொழில்முனைவர் உருவாக்கும் இலக்கை மாநில அரசு கண்டுள்ளது!!!

வீட்டுக்கொரு தொழில்முனைவர்
சிறு தொழில் அல்லது பெரும் வாணிகத்தின் மூலம் வீட்டுக்கொரு தொழில்முனைவரை உருவாக்கும் இலக்கை மாநில அரசு விவேகமாய் கையாண்டு வருவதாகவும் அதனை அடிப்படையாக கொண்டு வீட்டுக்கொருவர் வியபாரத்துறையில் முனைப்புக் காட்ட வேண்டும் எனவும் மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தின் இந்த இலக்கு சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளின் மூலம் சாத்தியமாக வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறிய அவர் தொழில்முனைவர்களை உருவாக்குவதில் அக்கழகம் காட்டி வரும் முனைப்பும் செயல்பாடுகளும் அதற்கு பெரும் துணையாக விளங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மற்ற மாநில கழகங்களை காட்டிலும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம் தனித்துவமாக விளங்குவதாகவும் மாணவர்கள் மத்தியிலும் தொழில் முனைவர் சிந்தனையை பதித்து வருவது அதற்கு பெரும் சான்றாக விளங்குவதாகவும் மந்திரி பெசார் சுட்டிக்காண்பித்தார்.

சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்தின் செயல்பாடும் அதன் இலக்கும் மாநில இலக்கோடு ஒத்துப் போவதாகவும் இம்மாநிலத்தில் அதிகமான தொழில்முனைவர்களை உருவாக்க அஃது நல்லதொரு தீர்வினையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.இத்திட்டங்கள் அதன் இலக்கை எட்டுவதற்கு சுமார் வெ.100 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இளம் தொழில்முனைவர் திட்டத்தின் மூலம் நம் இலக்கு சாத்தியமாகி வருவதாக கூறிய மந்திரி பெசார் தொடர்ந்து அதிகமான தொழில் முனைவர்களை உருவாக்கும் பயணத்தை சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம் மிகவும் விவேகமாகவும் துள்ளியமாகவும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நமது இலக்கு சரியான தடத்தை நோக்கி நகர்ந்தால் நிச்சயம் நம்மால் வீட்டுக்கொரு தொழில் முனைவர்களை உருவாக்கிட முடியும் என்றும் மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :