NATIONAL

புரோட்டோன் X70 ஒரு நாளைக்கு 200 கார்கள் வாங்க பதிவு செய்கிறார்கள்

கோலா லம்பூர், டிசம்பர் 28:

புரோட்டோன் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் சீனாவின் ஜேஸியாங் கீலி ஹோல்டிங்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய புரோட்டோன் X70 விளையாட்டு பயன்பாடு வாகனம் கடந்த டிசம்பர் 12இல் அறிமுகப்படுத்தியது முதல் ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரை வாங்க பதிவு செய்கிறார்கள் என்று புரோட்டோன் ஏடார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ அப்துல் ரஷிட் மூசா தெரிவித்தார்.

பதிவு செய்தவர்களில் 60%, பிரீமியம் ரக கார்களை அதிகம் விரும்பி வாங்குவதாக அவர் கூறினார். பிரீமியம் ரக கார்கள் சிறந்த அம்சங்கள், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விலைக்கு ஏற்ப மதிப்பு கொண்டவையாக கருதப் படுகிறது என்பதை அப்துல் ரஷீத் விளக்கினார்.

தகவல் : பெர்னாமா


Pengarang :