NATIONAL

மாநில அரசின் உதவித் திட்டங்கள் வழி கோல குபு பாருவில் ஆயிரக்கணக்கான பி40 தரப்பினர் பலனடைந்தனர்

ஷா ஆலம், ஏப் 26- கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மாநிலத்
தேர்தலுக்குப் பின்னர் மாநில அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்கள்
வாயிலாகக் கோல குபு பாருவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்
பலனடைந்துள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் இவ்வாண்டு மார்ச் வரை
சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் மூலம் குறைந்த வருமானம்
பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த
குடிமக்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு உதவிகளைப் பெற்றுள்ளனர்.

பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் மூலம் 336
தனித்து வாழும் தாய்மார்கள் உதவி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாதம்
300 வெள்ளி வீதம் ஆண்டுக்கு 3,600 வெள்ளி வழங்கப்படுகிறது.
இன வாரியாக உதவி பெற்றவர்கள் எண்ணிக்கை வருமாறு-
– 161 மலாய்க்காரர்கள்
– 40 சீனர்கள்
– 100 இந்தியர்கள்
– 35 பூர்வக்குடியினர்
இதே காலக்கட்டத்தில் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் 7,962
முதியோருக்கு தலா 200 வெள்ளி மதிப்பிலான ஜோம் ஷோப்பிங் பற்றுச்
சீட்டுகள் வழங்கப்பட்டன.

இன வாரியாக பற்றுச் சீட்டுகள் பெற்றவர்கள் எண்ணிக்கை வருமாறு-
– 2,624 மலாய்க்காரர்கள்
– 3,857 சீனர்கள்

– 1,338 இந்தியர்கள்
– 143 பிற இனத்தினர்
தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தாவாஸ்) திட்டத்தின் கீழ் 405
மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
– புத்தகப் பை
– எழுதுபொருள்கள்
– உணவுக்கலம்
– உண்டியல்

இவை தவிர, இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம்
பெற்றுள்ள 40 திட்டங்களில் மூன்றின் கீழ் ரொக்க நிதியுதவியைப்
பெறுவதற்கான தகுதியை வட்டார மக்கள் பெற்றனர்.
– கம்போங் சுங்கை ஜாங் கெர்லிங்கை சேர்ந்த 11 குடும்பங்கள்
– கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு வெ. 12,300

மேலும், சுமையைக் குறைக்கும் விதமாக 240 மோட்டார்
சைக்கிளோட்டிகளுக்கு 40 வெள்ளி மதிப்பிலான மசகு எண்ணெய்
வழங்கப்பட்டது

கோல குபு பாரு இடைத் தேர்தலில் ஹராப்பான் வேட்பாளராகப் பாங் சோக்
தவே (வயது 31) களமிறங்கவுள்ளார். இந்த தேர்தலுக்கான வேட்பு
மனுத்தாக்கல் இம்மாதம் 27ஆம் தேதியும் வாக்களிப்பு மே 11ஆம் தேதியும்
நடைபெறும்.


Pengarang :