ANTARABANGSA

இந்தியாவில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு தொடங்கியது- மோடி-ராகுல் காந்தி பிரச்சாரம் சூடு பிடிக்கிறது

பெங்களுரு, ஏப் 26- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இரண்டாம் கட்ட வாக்களிப்பு இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு இடையிலான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த தேர்தல் பிரசாரத்தில்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களான இன பாகுபாடு, நீடித்த திட்டங்கள் மற்றும் வரி விதிப்பு ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய தேர்தலாக கருதப்படும் இந்த இந்தியத் தேர்தலில் சுமார் 100 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இந்த ஏழு கட்டத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பொருளாதாரச் சாதனைகள், நலத் திட்டங்கள், தனிச் செல்வாக்கு, இந்து தேசியவாதம், தேசிய பெருமை ஆகியவற்றை முன்னிறுத்தி மூன்றாவது தவணையிலும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என மோடி நம்புகிறார். மோடி கணிசமான பெரும்பான்மையில் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

மோடியை எதிர்த்து களமிறங்கியுள்ள 24 கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சி கூட்டணி ஆக்ககரமான மற்றும் உறுதியான திட்டங்களை அமல்படுத்துவதற்கும் அதிக இலவசங்களை வழங்குவதற்கும் மோடியின் ஏதேச்சதிகார ஆட்சியை வீழ்த்துவதற்கும் வாக்குறுதியளித்துள்ளன.

இன்று தொடங்கும் வாக்களிப்பில் இந்தியாவிலுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 88 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 16 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொகுதிகள் நாட்டின் 13 மாநிலங்களில் பரவியுள்ளன.

அவற்றில் 44 தொகுதிகள் கர்நாடகா, கேரளா, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ளன.


Pengarang :