SELANGOR

கோலாலம்பூரில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், ஜன.14:

கோலாலம்பூர் மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஏற்பட்ட குடிநீர் விநியோகத் தடை நீங்கி மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது.

இவ்வேளையில், பொறுமை காத்து ஒத்துழைப்பு நல்கிய பயனீட்டாளர்களுக்கு சிலாங்கூர் குடிநீர் விநியோக நிறுவனம் (ஷாபாஸ்) நன்றி தெரிவித்துக் கொண்டது.

முன்னதாக, சுத்திகரிக்கப்படாத தண்ணீர் குழாய் ஒன்று பழுதானதால், கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

ஆயினும், பழுதடைந்த குழாய் சீரமைக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

குடிநீர் விநியோகம் குறித்து விபரங்கள் அறிய விரும்புவோர் www.syabas.com.my எனும் அகப்பக்கத்தில் அல்லது ஃபேஸ்புக்கில் “Air Selangor” என்ற பக்கம் வழியாகவும் அறிந்து கொள்ளலாம். மேலும் டுவீட்டர்@ “Air Selangor” அல்லது விவேக கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்படும் “ Air Selangor” எனும் செயலி வழியாகவும் விளக்கம் பெறலாம்.


Pengarang :