NATIONAL

பிஎன் கோட்டைகளை தகர்க்க பாக்காத்தானுக்கு அவகாசம் தேவை

கிள்ளான், ஜனவரி 27:

தேசிய முன்னணியின் கோட்டைகளாக கருதப்படும் இடங்களை வெல்வதற்கு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு நீீீண்ட கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஜசெக கட்்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். ஜசெகவின் வேட்பாளர் எம். மனோகரனின் தோல்வி எதிர்ப்பார்த்த ஒன்று தான் என்று அவர் தெரிவித்தார்.

புறநகர் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் பாக்காத்தான் ஆதரவு குறைவாக இருப்பதால் தேசிய முன்னணியின் வேட்பாளர் ரம்லி முகமட் நோரிடம் தோல்வி அடைந்த முக்கிய காரணம் என்றார். இதற்கு முன் தேசிய முன்னணி கேமரன் மலையில் தோல்வி அடைந்த சரித்திரம் இல்லை என்றும் நகரத்தில் இருந்து மிக தூரமாக இருப்பதனால் மக்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இன்று காலையில் தாமான் எங் ஆன் சந்தையில் ஆரஞ்சு பழங்களை வழங்கிய பின் இவ்வாறு கூறியதாக பிஎச் ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய முன்னணி நீண்ட காலமாக கேமரன் மலையில் தனது பலத்தை கொடி நாட்டி உள்ளதாகவும் பாக்காத்தான் மிக சுலபமாக வெற்றி பெற முடியாது என்று அவர் விவரித்தார். பாக்காத்தான் மத்திய அரசாங்கத்தை கொண்டிருந்தாலும் குறுகிய காலத்தில் இந்த தொகுதிகளை வெற்றி கொள்ள சாத்தியம் இல்லை என சாங் கிம் கூறினார்.


Pengarang :