SELANGOR

மகிழ்ச்சி கடலில் சிம்பொனி ‘ரூமா சிலாங்கூர் கூ’ உரிமையாளர்கள்

செமிஞ்சே, ஜனவரி 6:

ரூமா சிலாங்கூர்கூ திட்டத்தின் கீழ் எகோ வேர்ல்ட் மேம்பாட்டு நிறுவனம் நிர்மாணித்த 11 மாடி கட்டுப்படி விலை வீடுகளுக்கு விதித்த விலை வெ100,000 மட்டுமே. சிம்பொனி மூலம் வசிதியானவர்கள் குடியிருப்பு பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட அந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பார் மாதத்தில் நிறைவடைந்தன.

மூன்று புளோக்குகளில் மொத்தம் 870 வீடுகள் உள்ளன. மூன்று அறைகள், 2 குளியல் அறைகள் கொண்ட ஒரு வீட்டின் பரப்பளவு 750 சதுர அடி ஆகும்.
குறைந்த வருமானம் பெறும் சிலாங்கூர் குடிமக்களின் தேவையை இந்தத் திட்டம் மூலம் நிறைவுசெய்தது மகிழ்ச்சி அளிப்பதாக பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

குறைந்த விலையில். இந்த பரப்பளவில், 2 கார் நிறுத்துமிட பகுதிகள், பள்ளி வாசல், மண்டபம் மற்றும் பொழுது போக்கு வசதிகள் ஆகியவற்றுடன் நிர்மாணித்ததில் அரசாங்கத்துக்கு சுமையாக இருந்தது. ஆயினும், நான் மாநில மந்திரி பெசாராக இருந்தபோது, சிலாங்கூர் மக்களுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்பு நிர்மாணிக்கப்பட வேண்டும் என்று வீடமைப்பு மேம்பாட்டாளர்களை வலியுறுத்தி வந்தேன் என்று எகோ மேஜஸ்டிக்கில் சிம்பொனி ரூமா சிலாங்கூர்கூ திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றவர்களுக்கு வீட்டுச் சாவிகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

அதேவேளையில், இந்த வீடுகளின் உரிமையாளர்கள் இவற்றை நன்கு பராமரிப்பதோடு அண்டை அயலாருடன் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இந்த வீடுகளை வாங்கியவர்கள் தாங்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருப்பதாக இந்த வீடுகளை வாங்கியவர்கள் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தனர்,


Pengarang :