SELANGOR

2018ஆம் ஆண்டில் 13,944 தாவாஸ் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன

ஷா ஆலம், ஜனவரி 2:

2018ஆம் ஆண்டு முழுமையும் பெறப்பட்ட வாரிசான் அனாக் சிலாங்கூர் நிதியத்துக்கான (தாவாஸ்) விண்ணப்பங்களில் மொத்தம் 13,944 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிதியத்திற்கு 2017ஆம் ஆண்டில் மொத்தம் 40,357 விண்ணப்பங்கள் பெறப்பட்ட வேளையில் கடந்த 2018ஆம் ஆண்டு 24,634 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டதாக ‘யாவாஸ்’ எனப்படும் வாரிசான் அனாக் சிலாங்கூர் அறவாரியம் தனது அகப்பக்கத்தில் தெரிவித்தது.
2008ஆம் ஆண்டு இந்த நிதியம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை இதில் மொத்தம் 338,446 பேர் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
“அந்த எண்ணிக்கையில் 70 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், சீனர்கள் 17 விழுக்காட்டினர், இந்தியர்கள் 11 விழுக்காட்டினர், மற்றவர்கள் 3 விழுக்காட்டினர் ஆவர்.”
தாவாஸுக்கான புதிய விண்ணப்பம் ஜனவரி 31ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் நிறைவுபெறும்.
எனினும், இது 2018ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கான விண்ணப்பத்திற்கான இறுதி நாளாகும்

புதிய விண்ணப்பங்கள் செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரர்கள் வரும் 2019 பிப்ரவரி 22ஆம் தேதி மாலை மணி 5க்குள் அவற்றுக்கான ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தவறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


Pengarang :