NATIONAL

ஜனநாயக விழாவில் கலந்து கொள்வீர்! பொதுமக்களை அழைக்கிறது ஃபோர்சீ

கோலாலம்பூர், பிப்.9-

ஃபோர்சீ எனப்படும் ‘அங்காத்தான் பெம்பாருவான ஆசியா தெங்காரா’ எனும் அமைப்பு எம்ஏபி பப்ளிகாவில் பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஜனநாயக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பொது மக்களைக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

14ஆவது பொதுத் தேர்தல் வழி ஜனநாயக முறையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தைக் கொண்டாடுவதற்காக இந்த வட்டாரத்தில் முதன் முறையாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் வாரிய உறுப்பினர் ஹிஷாமுடின் ராய்ஸ் கூறினார்.

“தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் விவகாரங்கள் குறித்து தமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவிருக்கும் அமெரிக்க பேராசிரியர் நாவோம் சோம்ஸ்கி உட்பட இந்த வட்டாரத்தில் உள்ள 11 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் இந்த விழாவிற்காக அழைத்துள்ளோம்” என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்க உரை நிகழ்த்தவுள்ள பிரமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வேளையில் ம் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வரவேற்புரை ஆற்றுவார் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :