SELANGOR

பல்லின சமூகத்தினரிடையே தனித்தன்மைமிக்கது சீனப் புத்தாண்டு

செலாயாங், பிப். 5:

பல்லின சமூகத்தினரிடையே காணப்படும் சுபீட்சம் இந்நாட்டில் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை தனித் தன்மைமிக்க சிறப்பு வாய்ந்த கொண்டாட்டமாகத் திகழச் செய்துள்ளது.

சீன சமூகத்தினரோடு நாட்டிலிலுள்ள இதர இன சமூகத்தினரும் இணைந்து இந்த வருடாந்திர விழாவைக் கொண்டாடும்போது அது மேலும் சிறப்பானதொரு கொண்டாட்டமாக அமைகிறது என்று ஜான்சன் ஓங் (38) கூறினார்.

“சீனப் புத்தாண்டு மட்டுமல்ல இந்நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பெருநாளும் தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. காரணம் இந்த கொண்டாட்டங்களின் போது அனைத்து இன மக்களிடையே உள்ள ஒற்றுமையைக் காணமுடிகிறது” என்றார் அவர்.

“அதேவேளையில், சிறந்தவர்களாக நாம் திகழ்வதற்கு ஏதுவாக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியின் அடையாளமே இந்த விழா” என்று சிலாங்கூர் கினியிடம் அவர் விவரித்தார்.


Pengarang :