NATIONAL

போதைப் பொருள் நடமாட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்

கோலாலம்பூர், பிப்.13:

அதிகளவு போதைப் பொருள் நடவடிக்கை நடக்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பெல்டா குடியேற்றப் பகுதி மற்றும் மக்கள் வீடமைப்புத் திட்ட பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் இந்நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அரச மலேசிய போலீஸ் படையும் தேசிய போதைப் பொருள் தடுப்பு இயக்கமும் அவற்றின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவுள்ளன. .

சம்பந்தப்பட்ட பகுதிகளில் ‘பில் கூடா’ மாத்திரை மற்றும் ஷாபு என்ற போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் அவற்றின் விலை மலிவாக இருப்பதும் ஒரு காரணம் என்றும் போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ சுல்கிப்ளி தெரிவித்தார்.

“இந்தப் பகுதிகளில் போதைப் பொருள்கள் ஊடுருவலைத் தடுக்க இந்த இயக்கம் பாடுபடும். இந்நடவடிக்கையை முற்றாகத் துடைத்தொழிக்கவும் முயலும்” என்றார் அவர்

போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் இந்தப் பகுதிகளுக்குள் மீண்டும் பிரவேசிக்கும் அவர்கள் அப்பழக்கத்திற்கு திரும்பவும் அடிமையாகாமல் இருப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமாகும் என்று பெர்னாமாவிடம் சுல்கிப்ளி தெரிவித்தார்.


Pengarang :