Foto SELANGORKINI
NATIONAL

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேசிய சமூக கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது!

பூச்சோங், பிப்.18:

மக்களின் பொருளாதாரம், கல்வி ஆகியவற்றுடன் அவர்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தும் நோக்கத்தில் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு தேசிய சமூக கொள்கையை வரைந்துள்ளது.

தனித்தனி நிலப்பட்டா இல்லாத குடியேற்றப்பகுதிகளில் வாழும் மக்களின் நடத்தை காரணமாக ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு பிரதமர் துன் டாக்டர் மகாதீரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கொள்கையில் பல்வேறு அம்சங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

“பல்வேறு நிலையிலான மக்கள் குறிப்பாக ‘பி 40’ மக்களின் வீட்டுடைமைப் பிரச்னைகளைக் கேட்டறிந்த பின்னர் அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் தேசிய வீடமைப்பு மற்றும் கட்டுப்படி வீடமைப்புத் திட்டக் கொள்கையில் சில திருத்தங்களை அமைச்சு செய்தது” என்றார் அவர்.

ஆயினும், மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டமும் சரியாக பயன்படுத்தப்படாமலும் பேணப்படாமலும் இருந்தால் அவை அனைத்தும் அர்த்தமற்றவையாகிவிடும் என்று அவர் நினைவுறுத்தினார்.


Pengarang :