NATIONAL

மகளிரின் போராட்டம் இன்னும் முடியவில்லை! அமைச்சர் ஜுரைடா வலியுறுத்து

புத்ரா ஜெயா, மார்ச் 15-

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள மகளிருக்கான ஒரு சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் மகளிரின் போராட்டங்களும் சாதனைகளும் உலக மகளிர் தினம் வாயிலாக நினைவுகூரப்படுகின்றன.

மகளிர் இதுவரை எதிர்கொண்ட சவால்களையும் தடைகளையும் கருத்தில் கொண்டு மார் 8ஆம் தேதியை பெண்களுக்கான ஒரு பிரத்தியேக தினமாக கருதவேண்டும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் புவான் ஹாஜா ஜுரைடா கமாருடின் கூறினார்.

மகளிரின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, ஏனெனில் பல்வேறு துறைகள் மற்றும் நிலைகளில் மகளிருக்கு ஆண்களுக்கு சமமான உரிமை இன்னும் கிடைக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

“உலக பொருளாதார கருத்தரங்கின் இருபாலர் சமநிலை ஆய்வின்படி பெண்களுக்கு முழு அளவிலான சம உரிமை கிடைப்பதற்கு இன்னும் 170 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

எனவே, மலேசியர்கள் மார்ச் 8ஆம் தேதி கொண்டாட்டத்தை வேறு விவகாரங்களுடன் தொடர்பு படுத்தக்கூடாது என்று கெ அடிலான் கட்சி உதவித் தலைவருமான ஜுரைடா வலியுறுத்தினார்.


Pengarang :