SELANGOR

எஸ்..எம்.யூ.இ. திட்டத்தை மாநில அரசு கைவிடவில்லை

ஷா ஆலம், ஏப்.29-

சில தரப்பினர் கூறுவது போல், மூத்த குடிமக்களுக்கான நேசத் திட்டத்தை (எஸ்.எம்.யூ.இ) சிலாங்கூர் அரசாங்கம் ஒரு போதும் கைவிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மாறாக, இந்தத் திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு ஜோம் ஷாப்பிங் எனும் பற்றுச்சீட்டு வழங்கப்படுவதானது நாட்டின் நன்மைக்காகப் பாடுபட்டு களைத்துப் போன மக்களின் உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு திட்டமாகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த மூத்த குடிமக்களின் வாரிசு தாரர்களுக்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய மரண சகாய நிதிக்குப் பதிலாக இந்த பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

“எனவே. இந்த எஸ்.எம்.யூஇ. திட்டமானது மூத்த குடிமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்பதோடு அவர்களின் உழைப்ப அங்கீகரிப்பதற்காகவும் இது வழங்கப்படுகிறது. இவர்கள் வாழும் காலத்தில் இவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு மரணம் சம்பவித்த பின்னர் அவர்களின் ஈமக்கிரியைகளுக்குத் தேவையான உதவியாக இருப்பதைக் காட்டிலும் இது சிறப்பான நடவடிக்கையாகும்” என்றார் அவர்.


Pengarang :