NATIONAL

தே.மு.வின் “வெட்கம் என்ன தலைவா” தவறான கலாச்சாரத்தை ஏற்படுத்தும்

சிரம்பான், ஏப்.9-

ஊழல் மற்றும் நாட்டின் சொத்தை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர் கொண்டு வந்துள்ள எதிர்மறையான கலாச்சாரம் குறித்து பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் துன் டாக்டர் மகாதீர் கலக்கம் அடைந்துள்ளார்.

“வெட்கம் என்ன தலைவா” என்ற சுலோகத்தின் மூலம் நாட்டின் இளைய தலைமுறையினரிடம் எதிர்மறையான சிந்தனைகளை போதித்து வருகிறார் மூளை குழம்பிய அந்த முன்னாள் தலைவர் என்று கெடா மந்திரி பெசாருமான முக்ரிஸ் கூறினார்.

இந்த சுலோகங்களை சொல்லுவதன் மூலம் முன்னாள் தலைவரின் மோசமான செயல்களுக்கு அங்கீகாரம் அளிப்பதை உணராமல் இளைய தலைமுறையினர் இருப்பது ஓர் அபாயகரமான சூழல் ஆகும் என்று முக்ரிஸ் தெரிவித்தார்.

“இந்தத் தவறான கொள்கை இளைய தலைமுறையினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதோடு பிடிபடாத வரையில் திருடுவது என்று கூறும் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார் அவர்.


Pengarang :