NATIONAL

அடிப் மரண விசாரணை : வேன் மோதிய சம்பவம் நடத்திக் காண்பிக்கப்பட்டது

ஷா ஆலம், மே 15-

முகமது அடிப் மரண விசாரணையில் இன்று தீயணைப்பு வீரரான அடிப்பை வேன் ஒன்று மோதியிருக்கலாம் என்ற சாட்சியங்கள் கூறிய சம்பவம் போன்று ஒரு காட்சி நடத்திக் காட்டப்பட்டது. இதற்காக அவசர உதவி சேவைப் பிரிவின் வேன் ஒன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்டது.

எனினும், இங்கு பயன்படுத்தப்பட்ட வேன், கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தின் போது காயமுற்ற அடிப் பயன்படுத்திய வேன் அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காலை 10.30 மணிக்கு சுமார் அரை மணி நேரம் நீடித்த “மாதிரி” சம்பவத்தை கோலாலம்பூர் பிரேத பரிசோதனை நிபுணர் டாக்டர் அகமது ஹஃபிஸாம் ஹஸ்மி நடத்திக் காட்டினார்.

சம்பவத்தின் போது முகமது அடிப்புக்கு ஏற்பட்ட நெஞ்செலும்பு முறிவுக்கு வேன் மோதியதே காரணம் என்ற வாதத்தை நிரூபிக்க இந்த “மாதிரி” சமபவம் நடத்திக் காட்டப்பட்டது.

மரண விசாரணை நீதிபதி ரஃபியா முகமது மற்றும் இதர முக்கிய தரப்பினர் முன்னிலையிலும் அந்தச் சம்பவம் நடத்திக் காண்பிக்கப்பட்டது.


Pengarang :