NATIONAL

குடியேற்றக்காரர்கள் நில உரிமையை இழக்க மாட்டார்கள்!

கோலாலம்பூர், மே 20-

பெல்டா குடியேற்றக்காரர்கள் தங்களின் நில உரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக நாளேடு ஒன்றில் வெளியான செய்தியை பெல்டா இன்று வன்மையாக மறுத்தது.

கெடா, புக்கிட் தங்கா பெல்டா குடியேற்றக்காரர்கள் 130 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு உண்மையான நிலையைச் சித்தரிக்கவில்லை என்று பெல்டா நில நிர்வாகத் துறையின் வாரிசு பிரிவுத் தலைவர் முகமது யாசின் முகமது யூசோப் கூறினார்.

“இந்த ஆய்வில் நாடு முழுமையிலும் 112, 635 குடியேற்றக்காரர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், பெல்டா குடியேற்றத் திட்டத்தில் புதிதாக இணைந்தவர்கள் உட்பட மொத்தம் 2.5 மில்லியன் பேர் இடம்பெற்றுள்ளனர்” என்றார் அவர்.

எனவே, இந்த ஆய்வின் அடிப்படையில் எந்தவொரு புதிய கொள்கையையும் அறிமுகப்படுத்த இயலாது என்று அவர் சொன்னார்.

 


Pengarang :