SELANGOR

நிபந்தனைகளை மீறிய ரமலான் சந்தை நடத்துநர்கள் மீது 611 நோட்டீஸ்

பெட்டாலிங் ஜெயா, மே 30-

சட்ட விதிகளை மீறிய ரமலான் சந்தை நடத்துநர்களுக்கு இம்மாதம் 24ஆம் தேதி வரை மொத்தம் 611 நோட்டீசுகள் வழங்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன என்று டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயுத்தி பக்கார் கூறினார்.

“சுகாதாச்ர சேவை மற்றும் சுற்றுச் சூழல் துறையின் கீழ் இயங்கும் உணவுகளின் தர கண்காணிப்பு பிரிவு மற்றும் அங்காடி மற்றும் சிறு வணிகர் அமலாக்கப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளும் ரமலான் சந்தையின் நடவடிக்கையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன” என்றார் அவர்.
விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை சந்தை நடத்துநர்கள் கடைபிடிப்பதைக் கண்காணிக்க ஒவ்வொரு சந்தையும் குறைந்தது 4 முறை சோதனை செய்யப்பட்டது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :