NATIONAL

2020 ஆம் ஆண்டுவாக்கில் ஒவ்வொரு மாநிலத்திலும் திட கழிவு நிலையம் – ஜூரைடா தகவல்

கோத்தா கினபாலு, மே 23-

வரும் 2020 ஆம் ஆண்டுவாக்கில் ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது ஒரு திட கழிவு நிலையத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு இலக்கு வகுத்துள்ளது.
அதே வேளையில், வருமானத்தைத் தரக்கூடிய மறுசுழற்சி திட்டங்களையும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை மேம்படுத்தும் என்று அதன் அமைச்சர் ஜூரைடா கமாருடின் தெரிவித்தார்.

“உண்மையில் மீட்சி திட்டங்கள் அதிகமாக உள்ளன. நெகிழி பைகள், காகிதங்கள், எண்ணெய் மற்றும் மீதமுள்ள உணவு போன்றவை மக்களுக்கு வருமானத்தைத் தரக்கூடியவை. சேகரிக்கப்படும் ஒவ்வொரு குப்பையையும் சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய உணவு பொருளாகவோ அல்லது பணமாகவோ மாற்றலாம்” என்று என்று இங்கு அரசு சார்பற்ற அமைப்பான தேசிய சமூக கொள்கை அமலாக்க அமைப்பின் ஏற்பாட்டிலான ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் அமைச்சர் பேசினார்.

தேசிய சமூக கொள்கை அமலாக்க அமைப்பு பி 40 குறைந்த வருமானம் பெறும் தரப்பினரை பொருளாதாரத்தில் மேம்படுத்துவதற்கு அப்பால் அரசாங்க கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.


Pengarang :