NATIONAL

பி 40 தரப்பினருக்கான மை சலாம் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு

கோலாலம்பூர், ஜூன் 19:

அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் போதும் கடுமையான நோய்க்கு இலக்காகும் வேளையிலும் நிதி சிக்கலை எதிர்நோக்கும் பி 40 தரப்பினருக்கான தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்திற்கு (மை-சலாம்) நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு இதுவரை 2,474 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாத தொடக்கம் வரையில் 349,600 வெள்ளி மதிப்பிலான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சின் தொடர்பு மற்றும் வியூகப் பிரிவு தலைவர் ஜக்கியா ஹானும் கூறினார்.

அந்தத் தொகையில் மருத்துவமனை செலவினம் மற்றும் கடுமையான நோய்களுக்கான செலவினத் தொகை ஆகியவை அடங்கும் என்றார் அவர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 1,737 பேருக்கு 101,600 வெள்ளி வழங்கப்பட்ட வேளையில் கடுமையான நோய்களுக்கு இலக்கான 737 பேருக்கு 248,000 வெள்ளி வழங்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற்றவர்கள் மத்தியில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மேலும் அதிகமானோர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :