SELANGOR

மாநகரமாக உருவாக எம்பிகே இலக்கு

ஷா ஆலம், ஜூலை 10:

கிள்ளானை ஒரு மாநகரமாக ஊராட்சி மன்றம் அங்கீகரிக்க ஏதுவாக சைம் டார்பி நிறுவனத்தின் ஒத்துழைப்போடு அங்கு ஒரு பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) திட்டமிட்டுள்ளது.

2035 ஆண்டுக்குள் கிள்ளானை ஒரு மேம்பாடடைந்த மாவட்டமாக உருவாக்கும் இலக்கை அடைவதற்கு பல்வேறு முயற்சிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்பிகே தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் கூறினார்.

“தற்போது ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் வெள்ளி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகையைக் கொண்டே பல்வேறு திட்டங்களை இம்மன்றம் மேற்கொண்டு வருகிறது”. என்றார்.

“ஒரு மாநகரமாக அங்கீகரிக்கப்படுவதற்குப் போதிய தகுதிகளை எம்பிகே கொண்டுள்ளது. ஒரு பல்கலைக்கழகம் இல்லாதது மட்டுமே ஒரு குறையாக உள்ளது. எனவே, அதை நிர்வர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார் அவர்.


Pengarang :