DYTM Tengku Amir Shah melawat contoh Kompleks Asrama Anak Yatim Pulau indah di Selangor Bio Bay Show Gallery.19 Ogos 2019.Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

ஆதரவற்ற சிறார் இல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம், சிலாங்கூர் ராஜா மூடா முன்னிலையில் கையெழுத்து

கிள்ளான், ஆக.19:

சிலாங்கூர் மாநில ராஜா மூடா தெங்கு அமிர் ஷா தலைமையில் 300 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட பூலாவ் இண்டா ஆதரவற்ற சிறார் இல்லக் கட்டட நிர்மாணிப்பு உடன்படிக்கை கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.

ராஜா மூடா முன்னிலையில் ஸ்பெக்ரம் நிறுவன நிர்வாக அதிகாரி முகமது ரஸிஃப் அப்துல் வஹாப், யாயாசான் இஸ்லாம் டாரூல் ஏசான் அறவாரியத்தின் இடைக்கால தலைமை அதிகாரி நூர் முகமது ரசாலி அப்துல்லா மற்றும் வாக்காஃப் சிலாங்கூர் கழகத்தின் துணை தலைமை அதிகாரி அனுவார் ஹம்சா தோஹார் ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இக்கட்டடம் 1, 407 ஹெக்டர் நிலப்பரப்பில் 10 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்படவிருப்பதாக ஸ்பெக்ரம் நிறுவன நிர்வாக அதிகாரி முகமது ரஸிப் கூறினார்.

இதில் 5 மில்லியன் வெள்ளியை சென்ரல் ஸ்பெக்ரம் வழங்கும் என்றும் எஞ்சிய தொகை அறநிதி, நிதியுதவி மற்றும் நன்கொடை போன்ற நடவடிக்கைகள் மூலம் திரட்டப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :