NATIONAL

கத்ரி காரிடார் விரைவுச்சாலையின் (ஜிசிஇ) இரண்டு சந்திப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டன

கோலாலம்பூர், ஏப் 26: எல்மினாவில் உள்ள கத்ரி காரிடார் விரைவுச்சாலையில் (ஜிசிஇ) நுழையும் இரண்டு சந்திப்புகள் அப்பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக நாளை முதல் ஜூலை 26 வரை மூன்று மாதங்களுக்கு மூடப்படும்.

எல்மினாலிருந்து (கிழக்கு) ரவாங் நோக்கி நுழையும் சந்திப்பு மற்றும் எல்மினாலிருந்து (மேற்கு) ஷா ஆலம் நோக்கி நுழையும் சந்திப்பு ஆகியவை மூடப்படுவதாக “Prolintas Expressway Sdn Bhd“ (PESB) அறிக்கை ஒன்றில் அறிவித்தது.

“அப்பகுதிகள் மூடப்படுவதைத் தொடர்ந்து, ரவாங் அல்லது ஷா ஆலம் நோக்கிய நுழைவாயிலை அணுக பயனர்கள் இரு திசைகளிலும் அமைந்துள்ள சாலை வட்டத்தில் நுலைந்து மாற்றுபாதைக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நடவடிக்கையானது, அவ்விடத்தில் ஏற்படும் நெரிசலை சமாளிக்க உதவினால், அப்பகுதிகளை நிரந்தரமாக மூட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகள், சொத்து மேம்பாட்டாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்கங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் இந்த மூடல் நடவடிக்கை விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டதாக “PESB“ தெரிவித்தது.

ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால், “PROLINTAS“ ஹாட்லைனை 1800-22-8888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

– பெர்னாமா


Pengarang :