RENCANA

ஓவிய எழுத்து விவகாரத்தால் இனங்களின் ஒற்றுமைக்கு சோதனை

கோலாலம்பூர், ஆக.14-

அரேபிய ஓவிய எழுத்தான காட் விவகாரத்தைக் காணும்போது கத்தியைவிட பேணாவின் முனையே கூர்மையானது என்பது உண்மையாகிறது.
உதாரணமாக, இந்த ஓவிய எழுத்து திட்டமானது சமூக ஒற்றுமைக்கு சிறிய அளவிலான பங்கை மட்டுமே ஆற்றக் கூடியது. ஆனால், பல்வேறு தரப்பினர் அந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கிவிட்டனர்.

பல்லின மக்களைக் கொண்டுள்ள நாடு தனது 62ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், ஒன்றுபட்டு முன்னேற வேண்டிய மலேசிய மக்கள் எந்த திசையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர்?
இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள் கொண்டாடப்பட வேண்டுமே அன்றி தவறான புரிந்துணைர்வை ஏற்படுத்தக்கூடாது என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழக சமூக அறிவியல் ஆய்வு மையத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் பி சிவமுருகன் கூறினார்.


Pengarang :