SELANGOR

எஸ்எம்யுஇ ஷாப்பிங் திட்டம்: மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு!

ஷா ஆலம், செப்.20-

மூத்த குடிமக்களுக்கான ஜோம் ஷாப்பிங் (எஸ்எம்யுஇ) திட்டம் நேற்று தொடங்கப்பட்டதால் மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்வமாடியது.

இந்த ஷாப்பிங் திட்டம் முதல் கட்டமாக செமெந்தா, தஞ்சோங் செப்பாட், சுங்கை துவா மற்றும் பண்டான் இண்டா ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியில் தொடக்கப்பட்டதாக அனாக் சிலாங்கூர் அறவாரியத்தின் தலைமை நிர்வாகி கான் பெய் நெய் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் இம்மாதத்தில் பிறந்த நாள் 17,340 கொண்டாடும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தலா 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்றார் அவர்.
இந்த எஸ்எம்யுஇ ஷாப்பிங் திட்டத்திற்காக மொத்தம் 6 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :