SRI AMAN, 18 Sept — Pemandangan matahari kemerahan akibat jerebu di Jalan Sri Aman – Lingga yang dirakam pada 7 pagi ini. Kualiti udara di Sri Aman secara umumnya menunjukkan penurunan setakat 8 pagi ini daripada peringkat bahaya kepada sangat tidak sihat. Menurut data yang dikeluarkan Jabatan Alam Sekitar (JAS), bacaan Indeks Pencemaran Udara (IPU) di sini menurun daripada 396 pada malam semalam kepada 239 pada 8 pagi ini. Berdasarkan tinjauan Bernama di sini mendapati tahap penglihatan di bandar Sri Aman semakin baik dan jelas berbanding beberapa kawasan di pinggir bandar berkenaan antaranya di Kampung Lingga yang masih terhad tahap penglihatannya. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA

புகைமூட்டப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்

கோலாலம்பூர், செப்.25-

ஒவ்வோர் ஆண்டும் இவ்வட்டாரத்தை அலைக்கழிக்கும் புகைமூட்ட பிரச்னைக்குத் தீர்வு காணும் பொருட்டு திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையற்ற விவசாய மேம்பாட்டு திட்டம் மற்றும் சட்ட அமலாக்கம் ஆகிய இரு முக்கிய அம்சங்கள் மீது கவனம் செலுத்துவது அவசியமாகும்.

வெப்ப காலமான ஜூன் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே விவசாயத்திற்காக மேற்கொள்ளப்படும் திறந்த வெளி எரிப்பு நடவடிக்கையே ஒவ்வோர் ஆண்டும் இக்காலகட்டத்தில் புகைமூட்டம் ஏற்படுகிறது என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் காற்றுத் தூய்மைக்கேடு பிரிவு நிபுணர் பேராசிரியர் டாக்டர் முகமது தாயிப் லத்திஃப் கூறினார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள கடுமையான புகைமூட்டத்திற்கு இந்தோனேசியாவின் காலிமந்தான் மற்றும் சுமத்திரா காடு எரிப்பு சம்பவமே காரணமாக இருக்கின்றது என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் உள்ள ஆசியான் நிபுணத்துவ வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் சுமத்திராவின் வெப்ப நிலை 777ஆக பதிவு செய்துள்ள வேளையில் காலிமந்தானில் 363ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :