NATIONALRENCANA

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்கும் அவல நிலைக்கு காரணம் என்ன?

பெட்டாலிங் ஜெயா, அக்.11-

அரசாங்க மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் அவசர சிகிச்சை அல்லது வெளிநோயாளி சிகிச்சைக்காகவும் மக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் வெகு காலமாகவே இருந்து வந்துள்ளது.
இது பணிபுரிபவர்களின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ள சூழல்ல. மாறாக, அரசு மருத்துவமனை அல்லது கிளினிக்கை நாடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்பட்டுள்ள சூழலாகும்.

அரசாங்க மருத்துவ சேவையை அதிகமான மக்கள் சார்ந்துள்ளனர். ஓர் ஊடக ஆய்வின்படி, நாட்டில் உள்ள நோயாளிகளில் 60 முதல் 60 விழுக்காட்டினர் அரசாங்க மருத்துவ சேவையை பெற்று வருகின்றனர். ஆனால், அரசாங்க மருத்துவ துறையோ 40 முதல் 50 விழுக்காட்டினருக்கும் மட்டுமே சேவையாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

நாம் உணர்கிறோமோ இல்லையோ, சிகிச்சைக்காக அல்லது தொடர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகமானோர் குறிப்பாக மூத்த குடிமக்கள் மருத்துவ சிகிச்சையை நாடுவதில் சலிப்புற்றுள்ளனர்.
அதேவேளையில், தனியார் மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிகிச்சை பெறுவதற்கான வசதியை வெகு சிலரே கொண்டிருக்கின்றனர். ஆனால், பி40 தரப்பினர் அல்லது வசதி குறைந்தோர் இன்னமும் அரசு மருத்துவமனையையே சார்ந்திருக்கின்றனர்,


Pengarang :