KUALA LUMPUR, 15 Mei — Bekas Perdana Menteri Datuk Seri Najib Tun Razak tiba di Kompleks Mahkamah Kuala Lumpur pada hari ke-18 perbicaraan berhubung kes penyelewengan SRC International Sdn Bhd, yang dihadapinya, hari ini. Perbicaraan kes itu di Mahkamah Tinggi bermula 9.11 pagi. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

1 எம்டிபியின் வெ.30 பில்லியன் கடனுக்கு நிதியமைச்சும் அரசாங்கமும் பொறுப்பு!

கோலாலம்பூர், அக்.1-

1எம்டிபி நிறுவனத்தின் கடன் தொகையான 30 பில்லியம் வெள்ளி நிதியமைச்சு மற்றும் கூட்டரசு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிம்னறத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

டத்தோ நஜிப் ரசாக்கை உட்படுத்தும் 1எம்டிபி நிதி முறைகேடு மீதான விசாரணையில் 16ஆவது நாளில் அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்ட துணைக்கேள்விக்கு பதிலளிக்கையில் இந்நிறுவனத்தில் 2009ஆம் ஆண்டு தொடங்கி 2013ஆம் ஆண்டு வரை தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகித்த டத்தோ ஷாரோல் அஸ்ரால் மேற்கண்ட தகவல் வெளியிட்டார்.

1எம்டிபி நிறுவனத்தில் தாம் பணிபுரிந்த காலத்தில் 30 பில்லியன் வெள்ளி கடன் பெறபட்டது என்றார் அவர்.
இந்நிறுவனம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்பதால் அதன் கடன் தொகைக்கு நிடியமைச்சும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Pengarang :