SELANGOR

2019 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாடு: வெ.447.3 மில்லியன் பரிவர்த்தனை

ஷா ஆலம், அக்.23-

மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையத்தில் கடந்த அக்டோபர் 10 தொடங்கி அக்டோபர் 13ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற்ற 2019 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாட்டில் 447.3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 194.6 மில்லியன் வெள்ளியோடு ஒப்பிடுகையில் இது ஓர் அபரிமித வளர்ச்சியாகும் என்று முதலீடு, வர்த்தக தொழில்துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
அந்த தொகையில் 247.3 மில்லியன் வெள்ளி சிலாங்கூர் அனைத்துலக கண்காட்சி, சிலாங்கூர் விவேக நகர் மாநாடு, சிலாங்கூர் புத்தாக்க ஆய்வு மற்றும் மேம்பாட்டு மற்றும் இலக்கவியல் பொருளாதார கண்காட்சி ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

9ஆவது மலேசியா-சீனா தொழில்முனை மாநாட்டின் மூலம் 200 மில்லியன் வெள்ளி பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :