Staff begin counting ballot papers at the count centre in Uxbridge, in west London, on December 12, 2019, for the UK general election. – Prime Minister Boris Johnson was on course for a decisive majority, exit polls indicated after voting closed in Britain’s general election on Thursday, paving the way for Brexit. (Photo by Oli SCARFF / AFP)
ANTARABANGSA

இங்கிலாந்து பொதுத் தேர்தல் : சுவரொட்டிகளும் தேர்தல் பிரச்சாரங்களும் இல்லை

மென்செஸ்டர், டிச.13-

இவ்வட்டாரத்தின் எதிர்கால திசையை நிரணயிக்கும் வரலாற்றுப் பூர்வ வாக்கெடுப்பில் இங்கிலாந்து மக்கள் பங்கெடுக்கவிருக்கின்றனர்.
2017ஆம் ஆண்டு தொடங்கி இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது பொதுத் தேர்தல் மற்றும் ஐந்தாண்டுகளில் நடைபெறும் மூன்றாவது தேர்தல் இதுவாகும்.

2022ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தல் முன்னதாகவே 2019ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
எனினும், மலேசியா போன்றில்லாமல், முக்கிய மாநகரங்கள் அமைதியாக காணப்படுகின்றன. அதேவேளையில் சாலையோர பிரச்சாரங்களும் சுவரொட்டிகளும் காணப்படவில்லை.
18 வயதுக்கும் மேல் உள்ள 46 மில்லியன் குடிமக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இத்தேர்தலின் வழி இந்நாட்டின் அடுத்த பிரதமர் போரிஸ் ஜான்சனா அல்லது தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெரெனி கோர்பினா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வர்.

சால்ஃபோர் மாநகரத்தில் நடைபெற்ற தேர்தலை கண்ணோட்டமிட்ட போது, அங்குள்ள வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை வாக்களிப்பு நடைபெறுகின்றது. ஆயினும், அங்கு வாக்காளர்களின் நீண்ட வரிசையும் இல்லை, அவ்வட்டாரத்தில் காவல் துறையினரும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்று ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் இல்லை.

பெரும்பாலான தேர்தல் நடவடிக்கைகள் இணையத் தளங்கள் மற்றும் வானொலி தொலைக்காட்சியிலும் நடைபெறுகின்றன.
இங்கிலாந்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசிக்கும் மலேசியரான அகமது ஷாரிஸால் காலிட் ( வயது 45), அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றார்.


Pengarang :