NATIONAL

பாதுகாப்பை உயர்த்த மின்னியல் பணப்பை செயல்முறையை விரிவுபடுத்துவீர்

கோலாலம்பூர், டிச.13-

பெரும்பாலான நாடுகள் ரொக்கமில்லா சமூகத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதால், நம் நாட்டு மக்கள் மத்தியில் மின்னியல் பணப்பை பயனீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
உதாரணமாக சீனாவில் ‘அலி கட்டண முறை’ எனும் சேவை செயலியின் உதவியுடன் பெரும்பான்மையான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகியுள்ளன என்று செனட்டர் டத்தோ லீ தியான் சிங் கூறினார்.

நாட்டின் கட்டணத் துறையில் 8 விழுக்காடு மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனையப் பயன்படுத்துவதால், உள்நாட்டு மின்னியல் பணப்பை தொழில்துறையை அரசாங்கம் மேம்படுத்துவது அவசியமாகும் என்று அவர் எடுத்துரைத்தார்.
மேலும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் மின்னியல் பணப்பை மென்பொருள் மற்றும் செயல்முறையை மேம்படுத்தும் தரப்பு தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார்.


Pengarang :