PBTSELANGOR

கோவிட் 19 பரவலைத் தடுக்க எம்டிகேஎலின் தீவிர நடவடிக்கை

ஷா ஆலம், பிப்.13-

தனது பணியாளர்கள் மத்தியில் கோவிட்19 எனும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அவர்களுக்கு சுவாசக் கவசம் மற்றும் கைகளைச் சுத்தம் செய்யும் திரவத்தை கோல லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகேஎல்) வழங்குகிறது. அனைத்து பணியாளருக்கும் குறிப்பாக பொது மக்களுடன் தொடர்பு கொள்ளும் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி சுவாசக் கவசம் வழங்கி வருவதாக மன்றத்தின் அறிக்கை கூறியது.

அதே வேளையில், பொது மக்கள் கூடும் இடங்களுக்கு பணியாளர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் என்று அது தெரிவித்தது. கிருமிகளை ஒழிக்கும் வகையில் தரை, முகப்பு மற்றும் மேசைகள் ஆகியவை அடிக்கடி சுத்தம் செய்ய பணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிக்க சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடும்படி பணியாளர்களும் அவர்களுடைய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அவ்வறிக்கை கூறியது.


Pengarang :