Anggota polis memeriksa surat pengesahan bertugas penunggang motosikal semasa sekatan jalanraya di Jalan Bangsar, Kuala Lumpur berikutan pelaksanaan Perintah Kawalan Pergerakan berikutan penularan Covid-19 pada 26 Mac 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

பிகேபியை பின்பற்றாத நபர்களுக்கு ரிம 1000 அபராதம்- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, ஏப்ரல் 9:

நேற்று தொடங்கி நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் இருக்கும் தரப்பினருக்கு ரிம 1000 அபராதத் தொகை கட்ட நேரிடும் என தற்காப்பு மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது வரையில் 95 நபர்களுக்கு அபராத நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

” பிகேபி நடைமுறைகளை பின்பற்றாத நபர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அபராத நோட்டிஸ் வழங்கப்படும். இரண்டு வாரங்களில் மேற்கண்ட அபராதத் தொகையை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் செலுத்தி விட வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் பணத்தை கட்ட தவறினால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்,” என இன்று புத்ராஜெயாவில்  நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.


Pengarang :